×

அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் விரைவு தகவல் குறியீடு மூலம் நன்கொடை செலுத்தும் வசதி

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கோயில்களுக்கு பக்தர்கள் நன்கொடைகள் வழங்குவதை எளிதாக்கும் வகையில், விரைவுத் தகவல் குறியீடு மூலம் நன்கொடை செலுத்தும் வசதியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று அறிமுகம் செய்து, 7,233 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ள இணையவழி நன்கொடை செலுத்தும் வசதியையும் தொடங்கி வைத்தார். அறநிலையத்துறையின் சார்பில் தெய்வ உருவப் படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள 2024ம் ஆண்டிற்கான நாட்காட்டியையும் அவர் வெளியிட்டார். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரிப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் நிலையிலான தனி அலுவலர்கள் (ஆலய நிலங்கள்) விஜயா, குமரேசன், ஜானகி, இணை ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‘‘இந்த முறையால் நன்கொடை வழங்குபவர்கள் நினைத்த இடத்திலிருந்து கோயிலுக்கு நன்கொடை அளிக்கலாம். ஒப்புகை, மின்னணு ரசீது மற்றும் வருமான வரி சலுகை சான்றிதழ் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்’’ என்றார்.

The post அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் விரைவு தகவல் குறியீடு மூலம் நன்கொடை செலுத்தும் வசதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Chennai ,Hindu ,Religious ,Endowment ,Commissioner ,PK Shekharbabu ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி